Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-11-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-11-2022) | Morning Headlines | Thanthi TV
x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த 44 செ.மீ மழை.... உப்பனாற்றின் கரை உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...

சீர்காழியில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.... பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு... தண்ணீர் பாய்ந்தோடுவதால் சீர்காழி - பூம்புகார் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு...

சீர்காழியில் பாதிக்கப்பட்ட இடங்கள் பற்றி அறிக்கையாக தயாரித்து முதல்வர் ஸ்டாலினிடம் அளிப்போம்... முதல்வர் தனிக்கவனம் செலுத்த கூறியுள்ளதாக தந்தி டிவிக்கு அமைச்சர் மெய்யநாதன் பேட்டி....

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கொட்டி தீர்த்த கன மழை.... 100- க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு...

காஞ்சிபுரம் மாங்காடு பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம்... கால்வாயை உடைத்து நீரை அகற்றிய அதிகாரிகள்....

சென்னையில் நள்ளிரவில் விட்டுவிட்டு பெய்த மழை... சாலைகளில் தேங்கிய மழைநீர்....

வைகை அணையில் இருந்து 8 ஆயிரத்து 900 கன அடியாக நீர் திறப்பு... தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.... 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் கயிறு கட்டி மீட்பு....

திருமூர்த்தி அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்... பக்தர்கள் செல்ல தடை விதிப்பு...




Next Story

மேலும் செய்திகள்