Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-09-2022) | Morning Headlines | Thanthi TV
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம், உயர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்... கல்லூரி மாணவிகளை சிங்க பெண்களே என அழைத்து, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...
புதுமைப் பெண் திட்டம், இந்தியாவுக்கே முன்னோடி திட்டம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் புகழாரம்... 66 சதவீத அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக இருப்பதாகவும் வேதனை...
மாணவர்களை கையேந்த வைப்பதுதான் புதுமைப்பெண் திட்டமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி... ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்துக்கான 696 கோடி நிதியை வைத்து பள்ளி கட்டிடங்களை மேம்படுத்தலாம் எனவும் யோசனை...
மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் வரவேற்பு... முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழாரம்...
நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் மேம்படுத்தப்படும்... ஆசிரியர் தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு.....
காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி, இன்று தமிழகம் வருகிறார்... நாளை காலை, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்...
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் விற்பனை செய்யப்படாது என ஜெ. தீபா உறுதி... விரைவில், அங்கு குடியேறப்போவதாகவும் தகவல்...
புதிய விமான நிலையம் கட்டுவதன் மூலம் 15 ஆயிரம் கோடி கமிஷன் அடிக்கப் பார்ப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு... தான் இருக்கும் வரை, புதிய விமான நிலையத்தை கட்ட விட மாட்டேன் எனவும் உறுதி...
டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதா? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேபம்..