இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (18-10-2023)

x
  • மருத்துவமனை மீது தாக்குதல் - 500 பேர் பலி..காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நோயாளிகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 500 பேர் பலி...
  • பொதுமக்கள் உயிரிழப்பது மிகத்தீவிரமான விவகாரம் என பிரதமர் மோடி கண்டனம்...போர் எந்த நோக்கத்துக்காக நடத்தப்பட்டாலும், முதலில் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான் என முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை...
  • இஸ்ரேலுக்கு உதவி - அமெரிக்கா உறுதிஹமாஸ்-க்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும்...போருக்கு மத்தியில் இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று உறுதி...ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட ஹமாஸ் கொடூரமானது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு...
  • காலை 7 மணி காட்சி - அனுமதி மறுப்பு லியோ காலை 7 மணி காட்சிக்கும் அனுமதி வழங்க தமிழக அரசு இன்று மறுப்பு...நடிகர் விஜய் திரைப்படம் என்றாலே, பிரச்சனைகளை வருவதாக இயக்குநர் லேகேஷ் கனகராஜ் பேட்டி
  • சுங்கச்சாவடி கட்டணம் ரத்து சென்னையை அடுத்த நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படாது...சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு..

Next Story

மேலும் செய்திகள்