இன்றைய தலைப்பு செய்திகள் (11-10-2023) |

x
  • காசாவில் 5வது நாளாக ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்...900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் இருந்து காயமடைந்தவர்கள் மீட்பு...இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்...
  • போரில் அமெரிக்கா தலையிட்டால் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்படுமென ஹவுதி அமைப்பு எச்சரிக்கை...எரிபொருள் தட்டுப்பாட்டால் காசாவில் மின் உற்பத்தி முடங்கி, மருத்துவமனைகள் இருளில் மூழ்கும் அபாயம
  • இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு, இந்திய தூதரகம் இன்று அறிவுறுத்தல்...டெல்லியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் திறப்பு...
  • எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் செவிசாய்க்கவில்லை என எடப்பாடி பழனிசாமி இன்று குற்றச்சாட்டு...மரபுப்படி நடப்பதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம்...அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றம்...
  • தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3,000 கன அடி வீதம்15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு....வரும் 16ம் தேதி முதல் அமல்படுத்துமாறு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்...காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்

Next Story

மேலும் செய்திகள்