இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (10.04.2023)
- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்...
- 144 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று தனித் தீர்மானத்திற்கு ஆதரவு...
- ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றும் ஆளுநரின் செயல்களை, தமிழக அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காது...
- தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று எச்சரிக்கை...
- ஆளுநர் மாளிகையின் செலவு விவரங்களை முறையாக வழங்கவில்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு...
- ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்...
- இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில் இன்று அறிவிப்பு...
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் இறுதி விசாரணை...
- ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு...
- கொரோனா பாதிப்பு அதிகரித்தால், பொது இடங்களில் கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படும்...
- தமிழகத்தில் போதுமான அளவு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தகவல்...
- கலாஷேத்ரா விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை...
- ஐஜி தலைமையில் விசாரணை நடத்தி, ஆறு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய இன்று உத்தரவு...
Next Story