இன்றைய தலைப்பு செய்திகள் (19-06-2023)

x
  • தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு முன்னுரிமை... மின்கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி...
  • சென்னை மழை குறித்து திருவாரூரில் இருந்தபடி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...திடீரென பெய்யும் மழையை எதிர்கொள்ளவும் அரசு தயார் என, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி...
  • சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மெட்ரோ பணி நடந்து வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்... வடிகால் பணி காரணமாக சென்னையில் பெரிய அளவில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்றும் தகவல்...
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை... கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்...வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்...
  • அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று, நாளை மறுதினம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி... இரு நாடுகள் இடையேயான உறவின் புதிய மைல்கல் என வெளியுறவு துறை செயலாளர் வினய் குவாட்ரா பெருமிதம்...

Next Story

மேலும் செய்திகள்