இன்றைய தலைப்பு செய்திகள் (13-04-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பெங்களூருவில், உரிய ஆவணங்கள் இன்றி, ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்...சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பரபரப்பு - 2 பேரிடம் விசாரணை...

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும்...தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி நேரில் மனு...

கர்நாடக தேர்தல் தொடர்பாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்...அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்...

சேலம் மாவட்டம் கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி...

நிலவிலிருந்து பார்த்தாலும், "தமிழ்" எனத் தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்க திட்டம்...தமிழ் மொழியை சிறப்பிக்கும் நடவடிக்கை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு...

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலையில் தேடப்பட்ட குற்றவாளிகள் இருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை...உத்திரபிரதேச சிறப்பு காவல் படை அதிரடி நடவடிக்கை...

பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் 71 ஆயிரம் பேர் பணி நியமனம்...காணொலி காட்சி வாயிலாக வழங்கினார் பிரதமர் மோடி...

பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு...அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு...

அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் கடைப்பிடிப்பு...சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு...




Next Story

மேலும் செய்திகள்