இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-10-2023)

x
  • தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடியை அகற்றுவது தான் மாநில அரசின் எண்ணம்...பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்...
  • மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது அரசியல் பண்ண தெரியவில்லை...ஒரு அதிகாரி போல செயல்பட்டு வேலை செய்தேனே தவிர, தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல்...
  • தமிழக பா.ஜ.க. நிர்வாகியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் ஆதரவு அளிப்போம்...கொள்கை - கோட்பாடுகளை தூக்கி எறிய தயார் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல்...
  • அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில்1.6 கிலோ தங்க கட்டி பறிமுதல்...சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை...
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அந்தனூர் பகுதியில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து...சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி... 6 பேர் படுகாயம்...
  • வங்கதேசத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து....15 பேர் உயிரிழப்பு... நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்...
  • சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்துள்ளனர்...திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு...

Next Story

மேலும் செய்திகள்