இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-07-2023)
- இந்தியா என்ற சொல் இப்போது பாஜகவுக்கு பிடிக்காத சொல்லாகிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்.....மதவாத - ஜனநாயக விரோத - மாநில உரிமைகளை பறிக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளப்படுத்துமாறு திமுக தொண்டர்களுக்கு கடிதம்......
- அமலாக்கத் துறையை அரசியல் நோக்கத்துக்காக பாஜக பயன்படுத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு....வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை ஏவும் பாஜகவின் மிரட்டல்களுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள யாரும் அஞ்சப் போவதில்லை என்றும் கருத்து....
- பரபரப்பான அரசியல் சூழலில நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்........32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.....
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம்...........அனைத்தையும் விவாதிக்க மத்திய அரசு தயார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி.......
- தமிழக ஆளுநரை திரும்பப் பெறுவது குறித்து மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க மக்களவை, மாநிலங்களவை தலைவர்களிடம் திமுக நோட்டீஸ்....விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்.....
- வரும் 22-ம் தேதி, காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்......மகளிர் உரிமைத்தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத் துறை சோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்.........
- மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.......சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்....
- சென்னையில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் நாளை முதல் வீடு வீடாக வழங்கப்படும்.....வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு முகாம்களிலேயே வங்கிக் கணக்கு ஏற்படுத்தி தரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்....
Next Story