இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-06-2023)

x
  • அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி...விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு...
  • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..... கலவரத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை....
  • கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூருக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும்..... டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தல்....
  • மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை... இல்லத்திற்கு நேரில் சென்று, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்.....
  • முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?..... எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால்....
  • அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர், அமைச்சர் பதவியில் இருப்பது தமிழகத்திற்கு தலைகுனிவு......தார்மீக நீதியை முதல்வர் பொருட்படுத்தவில்லையென ஈபிஎஸ் குற்றச்சாட்டு....
  • சென்னை காவேரி மருத்துவமனையில், ஐசியூவில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றம்..... உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்.....
  • அடுத்த மாநில மாநாடு குறித்து ஜூலை 1ம்தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.... முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.....

Next Story

மேலும் செய்திகள்