இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு இரண்டாவது முறையாக விளக்கம் அளித்தும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை....

ஆளுநர்கள், கூட்டாட்சி அமைப்பின் அதிகாரத்தில் அத்துமீறி செயல்படுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு....

தமது பணியில் மகிழ்ச்சி இல்லையென்று, தாம் உணர்ந்தால், அப்போதே பணியை விட்டுச் செல்வேன்....மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு...

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம்....அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் இடையேயான கேள்வி பதில்களால் அதிர்ந்தது அரங்கம்...

திருச்சியில், வரும் 24-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சின்னா பின்னமாகி விடுவார்கள்...ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் ஆரூடம்....

20ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு...நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்...

"அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது"... இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனு...

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?... டெல்லியில் நாளை நடைபெறும் தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்ப்பு...

சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவது, அந்த‌ந்த தொலைக்காட்சிகளின் விருப்பம்....தொலைக்காட்சி ஒளிபரப்பை கட்டாயப்படுத்த முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்.....

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை, மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற தீர்ப்பை, 3 மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும்...தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்