பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து பொற்கோயிலை மீட்க ராணுவ தாக்குதல் தொடங்கப்பட்ட தினம்... வரலாறு என்ன?
பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து பொற்கோயிலை மீட்க ராணுவ தாக்குதல் தொடங்கப்பட்ட தினம் இன்று.
1980களின் தொடக்கத்தில், காலிஸ்தான் என்ற தனி நாடு கேட்டு, பிந்தரன்வாலே தலைமையிலான சீக்கிய தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குல்களில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆயுத உதவிகளையும், இதர உதவிகளையும் பாகிஸ்தான் அளிப்பதாக இந்திய உளவுத் துறை கூறியது. பிந்திரன்வாலேவின் பிரிவினைவாத கொள்கைகளுடன் முரண்பட்ட சீக்கிய தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர்.
1982ல் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் மிக முக்கியமான புனித தளமான பொற்கோயிலிலுக்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த பிந்திரன்வாலே, அங்கிருந்து செயல்பட தொடங்கினார். ஏராளமான ஆயுதங்கள், வெடி குண்டுகள், துப்பாக்கி தோட்டக்கள் அங்கு சேகரித்து வைக்கப்பட்டன.
பிந்திரன்வாலே மற்றும் இதர பயங்கரவாதிகளை கைது செய்து, பொற்கோயிலை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து 1984ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, பஞ்சாபிற்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார். பயங்கரவாதிகளின் பிரந்திநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஜூன் 1ம் தேதி, பொற்கோயிலை இந்திய ராணுவம் சுற்றி வளைத்தது.
ஜூன் 5ஆம் தேதி பொற்கோயிலுக்குள் நுழைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடும் சண்டை மூண்டது. இரு தரப்பிலும் ஏராளமனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். பொற்கோயில் வளகாத்தில் உள்ள அகால் தக்த்
மற்றும் ஹரிமந்திர சாகிப் கடுமையாக சேதமடைந்தது. பிந்திரன்வாலே கொல்லப்பட்டார். பொற்கோயில் வளகாத்தை கைபற்றிய இந்தியராணுவம், நூற்றுக்கணக்கான பயங்கரவாதி களை கைது செய்தது.
பொற்கோயில் மீது இந்திய ராணுவத் தாக்குதல் டத்தியதற்காக, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் கோபமடைந் தனர். இதைத் தொடர்ந்து பிரதமரின் மெய்காவலர்களாக இருந்த இரண்டு சீக்கிய ராணுவ வீரர்களினால் அவர் 1984 அக்டோபரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொற்கோயில் மீது இந்திய ராணுவம் தாக்குதல் தொடங்கிய தினம், 1984 ஜூன் 5.