போராட்டத்தில் இறங்கிய மக்கள் "5 நிமிடம், 5-தே நிமிடம்" - 22 ஆண்டு பிரச்சனையை சாமர்த்தியமாக தீர்த்த டி.எஸ்.பி.
திருவண்ணாமலையில் 22 ஆண்டுகால பட்டா போராட்டத்தை, 4 மணி நேரத்தில் தீர்த்து வைத்த டிஎஸ்பிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.போளூரை அடுத்த மேல்சோழங்குப்பத்தில், 2000 ஆம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட 17 வீட்டிற்கு, கலசப்பாக்கம் வட்டாட்சியர் பட்டா வழங்கவில்லை. இதனால், 22 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் கிராம மக்கள், வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி நடை பயணம் மேற்கொள்ள புறப்பட்டனர். வட்டாட்சியரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், டிஎஸ்பி குமார், 5 நிமிடம், 5 நிமிடம் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, 10 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும் என வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி எழுதி கொடுத்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Next Story