பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதல்... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பொங்கல் பண்டிகைக்கு வழக்கம்போல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.
x

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியான பிறகும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இலவச வேட்டி, சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று வெற்று அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஒரு கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழக்கம்போல வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, எடப்பாடி பழனிசாமி இனிமேலாவது ஊடகங்களைப் பார்த்து அரசின் சாதனைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு குழப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் காந்தி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்