தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை பயங்கர தாக்குதல் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்
- மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தியதையடுத்து, லேசான காயமடைந்த ஒருவர் பொறையாறு அரசு மருத்துவமனையிலும், படுகாயமடைந்த 5 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- அங்கு சிகிச்சை பெற்றுவரும் அவர்களை, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
- தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், மீனவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்தும், அவர்களுக்கான இழப்பீடுகள் குறித்தும் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
Next Story