"மரபு மீறல்..." "உரையை தவிர்த்த கவர்னர்... ஆளுநர் வாசித்த பகுதி நீக்கம்.." முதல்வர் ஸ்டாலின் அதிரடி
ஆளுநர் உரை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட குறிப்பை, ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார். சட்டமன்ற மரபை மீறி அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெற் கூடாது என அவர் வலியுறுத்தினார். இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்து கொண்டிருந்த போது, ஆளுநர் பாதியில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
Next Story