“வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்“ - 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

x

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது

. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை, கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நாகை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே காற்றுடன் சாரல் மழை செய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்