டிச.9ஆம் தேதி அடித்து ஊற்றப் போகும் மழை
வங்கக்கடலில் இன்று மாலை மாண்டஸ் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நகர்ந்து, இன்று மாலை புயல் சின்னமாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு
ஐக்கிய அரபு அமீரக பரிந்துரையின்படி மாண்டஸ் என பெயரிடப்பட உள்ளது. மாண்டஸ் புயல் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் நிலைக் கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வரும் 9ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story