ஆளுநர் உரையில் நிகழ்ந்த சம்பவம்...ஜன.7 இரவு 8 மணிக்கு நடந்தது என்ன? - உண்மையை உடைத்த அரசு..!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடந்தது என்ன என்பது குறித்தும், அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு தயாரித்த ஆளுநர் உரையில் வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்ற வரிகள் சேர்க்கப்படவில்லை என்றும், அதனை சேர்க்க வேண்டும் என எந்தவிதமான கோரிக்கைகளும் பெறப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
வாழிய செந்தமிழ் என்கிற பாரதியாரின் கவிதை வரி, புத்தாண்டு -பொங்கல் வாழ்த்துக்கள் நீக்கப்பட்டுள்ளது என சொல்வது சரியல்ல என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டதாகவும், இது தரவின் அடிப்படையிலான உண்மை தகவல்,என்றும் ஆனால் ஆளுநர் அதனை வாசிக்கவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை அவரது ஒப்புதலுக்காக ஜனவரி 6 ஆம் தேதி, காலை 11.30 மணிக்கு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், திருத்தங்களை மேற்கொண்டு ஜனவரி ஏழாம் தேதி இறுதி உரை ஜனவரி 7 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி எட்டாம் தேதி காலை 11.30 - க்கு ஆளுநர் ஒப்புதலுடன் கோப்பு அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் சில பத்திகளை நீக்குமாறு கோரிய போது, உரை அச்சிற்கு சென்று விட்டது என கூறியதும், உரையை வாசிக்கும் போது தவிர்த்து விட்டு வாசியுங்கள் என்ற வதந்தி தவறாக பரப்பப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்கும் போது, தவறான தகவல்களையும், வதந்திகளையும், பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களில் பரப்புவது சரியல்ல என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.