முதியவரின் சடலத்தை புதைக்க எதிர்ப்பு - கிராம பெண்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

x
  • திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே முதியவரின் சடலத்தை புதைக்க அதிகாரிகள் அனுமதி மறுத்த நிலையில், பெண்கள் ஒன்று கூடி அடக்கம் செய்தனர்.
  • பள்ளிப்பட்டு அருகே உள்ள விஜயமாம்பாபுரம் கிராமத்தில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த நரசிம்மலு நாயுடு என்ற முதியவரின் உடலை சுடுகாட்டில் புதைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
  • அதே பகுதியைச் சேர்ந்த பாபு நாயுடு என்பவர், சுடுகாடு இருக்கும் இடம் தனக்குச் சொந்தமான நிலம் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், முதியவரின் சடலத்தை புதைக்க பள்ளிப்பட்டு வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோர் அனுமதி மறுத்தனர்.
  • இருப்பினும் கிராம மக்களும், உறவினர்களுன் சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
  • இதையடுத்து, அங்கு கூடியிருந்த பெண்கள், போலீசாரின் எதிர்ப்பை மீறி, சுடுகாட்டில் குழி தோண்டி முதியவரின் உடலை அடக்கம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்