ஒரு துடைப்பம் 440 ரூபாய்க்கு வாங்கிய திருப்பூர் மாநகராட்சி - அதிர்ச்சி தகவல்

x

திருப்பூர் மாநகராட்சியில் ஒரு துடைப்பம் 440 ரூபாய்க்கு வாங்கி, லட்சக்கணக்கில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் தொட்டிகள், துடைப்பங்கள் உள்ளிட்ட 13 வகையான பொருட்களை, கடந்தாண்டு டெண்டர் விட்டு வாங்கியது. இந்த நிலையில் 800 துடைப்பங்களை 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதும், ஒரு துடைப்பத்துக்கு 440 ரூபாய் வழங்கியதும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. வெளிச்சந்தையில் குச்சியோடு கூடிய துடைப்பம் 100 ரூபாய் என்ற நிலையில், மாநகராட்சி நிர்வாகம் 440 ரூபாய் செலுத்தி ஊழலில் செய்துள்தாக குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், இது தொடர்பாக விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்