மோசடி கும்பலின் புது Trick.. துணிக்கடைகளே டார்கெட் .. ரூ.50 லட்சம் வரை சுருட்டிய கும்பல்

x

துணிக்கடைகளின் ஜிஎஸ்டி எண்களை மட்டும் பயன்படுத்தி சுமார் 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், கார்மெண்ட் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட ஒருவர் சென்னையில் உள்ள துணிக்கடைக்கு மொத்தமாக துணிகள் வேண்டும் என கேட்டுள்ளார். அதை நம்பி 2 லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகளை அனுப்பியிருக்கிறார் அவர்.. இடைத்தரகர் சுரேஷ் என்பவரை தொடர்ந்து கொளத்தூரை சேர்ந்த பிரபு, புழல் விக்னேஷ் ஆகிய 3 பேரும் சுப்ரமணியனிடம் இருந்து துணிகளை வாங்கிய போதிலும் பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சுப்ரமணியம் இதுகுறித்து விசாரித்த போது சென்னையில் உள்ள துணிக்கடைகளின் ஜிஎஸ்டி எண்ணை போலியாக பயன்படுத்தி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்