இணையதள குற்றங்கள் குறித்து மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு..!

x
  • திருப்பூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகள், இணையதள குற்றங்கள் குறித்து சினிமா மீம்ஸ்கள் மூலம் மாவட்ட காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
  • நாட்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களும், சமூக ஊடகங்களில் மீம்ஸ் எனப்படும் கேலி சித்திரம் வழியாக டிரெண்ட் ஆகி வருகின்றன.
  • இன்றைய டிஜிட்டல் உலகில் காலத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொண்ட திருப்பூர் மாவட்ட காவல்துறை, தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்களில் மீம்ஸ்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
  • குறிப்பாக, தலைக்கவசம் அணிவதன் அவசியம், வங்கி ஓடிபி மற்றும் கடவுச்சொல்லை பாதுகாப்பது, பெண்கள் பாதுகாப்பு, பண மோசடி, இணையவழி குற்றங்கள் போன்றவை குறித்து மீம்ஸ்களை உருவாக்கி திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் களமிறங்கி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்