குறைந்த விலையில் சொகுசு பங்களா... கில்லாடி வேலை பார்த்த 'பலே லேடிகள்' - நம்பி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
- திருப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரன் என்பவரை, கடந்த 11ம் தேதி பொங்கலூர் பகுதியை சேர்ந்த கலாராணி, சுமதி ஆகிய இரு பெண்கள் தொலைபேசியில் அழைத்துள்ளனர்.
- அப்போது, கரட்டுபாளையத்தில் குறைந்த விலையில் சொகுசு பங்களா விற்பனைக்கு உள்ளதாகவும், அதனை வாங்கி விற்பனை செய்தால், 2 மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.
- அதனை நம்பிய சந்திரன், அந்த பகுதியில் உள்ள பங்களாவிற்கு சென்று பார்த்தபோது, 2 பெண்கள் உட்பட அங்கு மறைந்திருந்த மேலும் 3 பேர், சந்திரனை கட்டையால் தாக்கியுள்ளனர்.
- பின்னர் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தையும் பறித்து கொண்டனர்.
- அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிய சந்திரன், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
- அதன் அடிப்படையில், கலாராணி, சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில், தலைமறைவாக இருந்த சுபாஷ், கார்த்தி, சிலம்பரசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story