திருப்பதி லட்டு.. கோயில் நிர்வாகம் எடுத்த முடிவு
திருப்பதி கோயிலில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்லும் பக்தர்களுக்கு சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில் ஓலை பைகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது...
திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு பக்தர்கள் லட்டுகளை பிரசாதமாக வாங்கி செல்வது வழக்கம். சாமி தரிசன வாய்ப்பு கிடைக்க தவறினாலும் கூட லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்கள் தவறுவதே கிடையாது.
அந்தளவுக்கு பிரசித்தி பெற்ற லட்டுகள் இதுவரை துணி அல்லது நெகிழிப்பைகளிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி நம் தாத்தா பாட்டி காலத்தைப் போல தென்னை அல்லது பனையால் ஆன ஓலைகளில் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த ஓலை பைகளை கவுண்டர்கள் அமைத்து 10, 15 மற்றும் 20 ரூபாய் வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story