ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் -10 டன் மலர்களைக் கொண்டு அலங்காரம்
தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய கட்டண சேவைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நெய்வேத்தியம் காண்பிக்கப்பட்டது. மேலும், சுமார் 10 டன் மலர்களைக் கொண்டு கோயில் வளாகம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. யுகாதியை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
Next Story