"திருப்பதி ஏழுமலையான தரிசிக்க முடியாத ஏழை மக்களுக்காக.." - தேவஸ்தானம் அறிவிப்பு
- திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் தியாகராய நகர் ஜி என் செட்டி சாலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடத்தப்பட உள்ளது.
- இதனை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி உடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
- அப்போது பேசிய சுப்பா ரெட்டி, திருப்பதிக்கு அடுத்து இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- மிக விரைவில் சென்னையில் வெங்கடேஸ்வரா கடவுளுக்கான நிரந்தர கோயிலை கட்ட உள்ளதாக கூறினார்.
- அதற்கான நிலங்கள் வாங்கப்பட்ட வருவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடியும் என்றார்.
- மேலும், பட்டியல் இனத்தவர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில், ஏழுமலையான தரிசிக்க முடியாத ஏழை மக்களுக்காக கோவில் கட்டி தர, திருப்பதி தேவஸ்தானம் தயாராக உள்ளதாக சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
- இதற்கான கோரிக்கையை விரைவில் முதலமைச்சருக்கு வைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Next Story