திருநெல்வேலி To தென்காசி... சோதனை ஓட்டத்தில் 121 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்த ரயில்

x

திருநெல்வேலி - தென்காசி இடையிலான ரயில்வே வழித்தடத்தில், 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட திருநெல்வேலி - தென்காசி ரயில்வே வழித்தடம், அகலப் ரயில் பாதையாக மாற்றப்பட்டு 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இருப்பு பாதைகள் பலப்படுத்தப்பட்டு, 121 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனிடையே, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்