ஆசிரியர் செய்யும் காரியமா இது...? மாணவிகளை ஆபாச படம் எடுத்த 'வக்கிர' வாத்தி.!-ரவுண்டு கட்டி தெறிக்கவிட்ட கிராமத்தினர் -நாமக்கலில் அதிர்ச்சி

x

நாமக்கல் அருகே மாணவிகளை தவறாக படம் பிடித்த ஆசிரியரை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..


விருதாச்சலத்தில் பள்ளி தாளாளர் அத்துமீறிய சம்பவம், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொந்தளிப்பாக இருக்கும் கலாஷேத்ரா என அடுத்தடுத்த சம்பவங்கள் கல்வி நிலையங்களில் அரங்கேறி வரும் நிலையில் இப்போது நாமக்கல் அருகே நடந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...


நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான ஆசிரியர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் பன்னீர்செல்வம்.

மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது மட்டும் அவரின் வேலையாக இருந்திருந்தால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் தன்னிடம் உள்ள செல்போனை வைத்துக் கொண்டு மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வருவதாக அரசல் புரசலாக தகவல் வெளியானது...

இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லவே கொதித்துப் போன அவர்கள், பள்ளியின் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்..

இந்த விவகாரம் வெளியே தெரியவரவே, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது...

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்த போதிலும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தனர் மக்கள்...

பின்னர், பள்ளியின் தலைமையாசிரியர் ஷர்மிளாவிடம் விசாரணை நடத்திய போலீசார் பள்ளியின் உள்ளே இருந்த ஆசிரியர் பன்னீர்செல்வத்தை அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அங்கே திரண்டிருந்த பெற்றோர் மற்றும் போலீசாரிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பரமத்தி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் பன்னீர்செல்வம் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார்.

பள்ளிகளில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு...


Next Story

மேலும் செய்திகள்