சும்மா சென்றவரின் தலையை வெட்டி உடலுக்கு அருகிலேயே படுத்துக்கொண்ட கொலையாளி - திகில் கிளப்பிய சம்பவம்
திருச்சி அருகே தலை துண்டித்து விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. மனநலம் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இருப்பினும், மன அழுத்தம் காரணமாக செல்லத்துரை, அப்பகுதி வாசிகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்நத துரைராஜ் என்ற விவசாயியை, செல்லத்துறை திடீரென தாக்கி உள்ளார். இதில், துரைராஜ் நிலை தடுமாறி கீழே விழ, செல்லத்துரை அரிவாளை கொண்டு துரைராஜியின் தலையை துண்டித்ததுடன் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் துரைராஜ் பரிதாபமாக உயிரிழக்க செல்லத்துறை அருகிலேயே படுத்து கிடந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்து சடலத்தை மீட்ட போலீசார், செல்லத்துரையை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் விசாரித்து வருகின்றனர்.