"லைப்பே போச்சு..ஸ்கூல் போகவே முடியாது.. முதல்வர் ஐயா என்னை காப்பாத்துங்க" - ஹீலியம் பலூனால் சிதைந்த சிறுவன் கதறல்

x

"லைப்பே போச்சு..ஸ்கூல் போகவே முடியாது.. முதல்வர் ஐயா என்னை காப்பாத்துங்க" - ஹீலியம் பலூனால் சிதைந்த சிறுவன் கதறல்

திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தில், 13 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில், தனக்கு முதலமைச்சர் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளான். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி மேலரண் சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடை முன் நடந்த இந்த விபத்தில், ரவி என்பவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். மேலும், 13 வயது சிறுவன் மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது கண்பார்வை சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவ சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளான்.


Next Story

மேலும் செய்திகள்