கோபத்தில் உயிரை மாய்த்த பெண் .. வீதிக்கு வந்த உறவினர்கள் | Tiruchirappalli
திருச்சி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம், தொட்டியபட்டு பகுதியைச் சேர்ந்த தம்பதி நந்தகுமார்-கோகிலா. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குடும்ப தகராறு காரணமாக கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கோகிலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. கோகிலாவின் உடல், உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story