சிறார் ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக புகார்... ரெய்டில் சிக்கிய மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் - சிபிஐ வழக்குப் பதிவு
மணப்பாறையைச் சேர்ந்த சாம் ஜான் என்பவர், இணையத்தில் இருந்து சிறார் ஆபாசப் படங்களை தரவிறக்கம் செய்து சேகரித்து, ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பியதாகத் தெரிகிறது. இது குறித்து ஜெர்மனி இன்டர்போல் அனுப்பிய தகவலை அடுத்து, மணப்பாறையில் உள்ள சாம் ஜானின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தி மடிக்கணினி, செல்போன், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றை கைப்பற்றினர். அதன் தொடர்ச்சியாக, சாம் ஜான் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story