"ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைப்பு
- திருச்செந்தூர் அருகே காயாமொழி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
- சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்.
- இதையடுத்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மக்களை தேடி மருத்துவ திட்டத்தை கொண்டு வந்து தமிழகத்தை நோயற்ற மாநிலமாக முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
- தொடர்ந்து, முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி வேஷ்டி, சேலைகளை வழங்கிய அமைச்சர், மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
- முன்னதாக திருச்செந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.
Next Story