நாட்டு வைத்தியரிடம் புலித்தோல் "புற்றுநோய் மருந்துக்கு மண்ணுளி பாம்பு.." - கோவையில் பரபரப்பு | Kovai
கோவையில் புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பதற்காக மண்ணுளி பாம்பினை பதுக்கி வைத்திருந்த நாட்டு வைத்தியரை, வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் உள்ள நாட்டு மருந்து கடையில், புலித்தோல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாட்டு மருந்து கடை உரிமையாளரும், நாட்டு வைத்தியருமான சின்ன தம்பிராஜ் என்பவரது வீட்டில், வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து புலித்தோலும், மருந்து கடையில் இருந்து 2 மண்ணுளி பாம்புகள் மற்றும் ஒரு மான் கொம்பும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து சின்ன தம்பிராஜை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க, மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story