"தமிழக இளைஞர்கள் மீது மும்முனை தாக்குதல்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் மது, கஞ்சா, சூது என இளைஞர்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தப்படுவதா குறிப்பிட்டார்.
எனவே, அடுத்த தலைமுறையை காக்க வேண்டும் எனவும்,போதை பொருள் தடுப்பு பிரிவில் புதியதாக 20 ஆயிரம் காவலர்களை பணியமர்த்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Next Story