மூன்று மாதங்களாக தொடர்ந்த பகை... பாஜக உறுப்பினர் வெட்டி கொலை...

x

கொல்லப்பட்டவர் 44 வயதான ரமேஷ். பாஜகவின் தொண்டராக அறியப்பட்ட ரமேஷுக்கு இன்னொரு முகமும் இருந்திருக்கிறது. அடித்தடி, கட்டபஞ்சாயத்து, கொலை முயற்சி என தனக்கென சில கொள்கைகளை வைத்துக்கொண்டு அதனை பின்பற்றி வந்திருக்கிறார் ரமேஷ். இந்நிலையில் தான் கொலை முயற்சி வழக்கில் சிறை சென்ற ரமேஷ், சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்திருக்கிறார். சம்பவம் நடந்தன்று, கட்சி பணி தொடர்பாக எம்.எல்.ஏ அலுவலகத்தில் வட்டமேசை மாநாடு போட்டு விவாதித்து கொண்டிருந்த போது தான் திடீரென நுழைந்த மர்ம கும்பல் ரமேஷை வெட்டி கொலை செய்திருக்கிறது.சம்பவ இடத்திலிருந்து தடயங்களை சேகரித்த போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அப்போது தான் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த கொலை முயற்சிக்கு பழிக்கு பழியாக ரமேஷ் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷும், அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபனும் பாலிய சிநேகிதர்கள். கூலிவேலை பார்த்து வந்த இருவரும் கையில் பணம் சேரும் போதெல்லாம் பார்டி செய்து குடியும் கும்மாளமுமாக வாழ்ந்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன் அப்படி நடந்த ஒரு பார்டியில் போதை தலைகேறிய ரமேஷ் ஸ்டீபனின் குடும்பத்தை தரக்குறைவாக பேசி கிண்டல் செய்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஸ்டீபனை கத்தியால் குத்தி கிழித்திருக்கிறார் ரமேஷ். ஸ்டீபன் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த முதலியார்பேட்டை போலீசார் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.ரமேஷ் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் ஜாமீனில் வெளியே வந்தது ஸ்டீபனுக்குள் கொலைவெறியை தூண்டி இருக்கிறது. நண்பனை பழித்தீர்க்க கூட்டாளிகளோடு சேர்ந்து திட்டம் தீட்டி இருக்கிறார்.

சம்பவம் நடந்தன்று எம்.எல். ஏ அலுவலக வளாகத்தில் மது அருந்து கொண்டிருந்த ரமேஷை, ஸ்டீபனும் அவரின் கூட்டாளிகளும் சுத்துப்போட்டிருக்கிறார்கள். மதுபோதையிலிருந்த ரமேஷை பீர் பாட்டிலால், அடித்து, பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றிருக்கிறார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொண்ட முதலியார்பேட்டை போலீஸார் ஸ்டீபனையும் அவரின் கூட்டாளி மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்