மிரட்டும் ’பிபர்ஜாய்’ புயல் - கட்ச் கடற்கரை பகுதிகளில் 144 தடை உத்தரவு
பிபர்ஜாய் புயலின் காரணமாக, கட்ச் கடற்கரை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...
பிபர்ஜாய் புயல் எதிரொலியால், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் மும்பை மற்றும் தானேக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் குழு ஆகியவை தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், பிபர்ஜாய் புயல் ஜூன் 15-ஆம் தேதி கரையை கடக்க கூடும் என்பதால், கட்ச் கடற்கரைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 16-ஆம் தேதி வரை பள்ளிகளையும் மூட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story