"கொரோனா காலத்தில் பிணையில் விடப்பட்டவர்கள்... மீண்டும் சரணடைந்திடுக" - உச்சநீதிமன்றம் அதிரடி

x

சிறைச்சாலைகளில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம் ஆர் ஷா தலைமையிலான அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில், கொரோனா காலத்தில் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட அனைவரும் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயர் அதிகார குழுவால் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சரணடைய உத்தரவிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்