தங்கம் புதையல் என கூறி நம்பியவர்கள் தலையில் அலுமினியம் கட்டிய கும்பல்... பொதுமக்களே உஷார்..
தங்க புதையல் மோசடியால் சூலூர் மளிகைக்கடை உரிமையாளர் ஏமாந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த வாகராயம்பாளையம் பகுதியில் மளிகைக்கடை உரிமையாளர் சதாசிவத்திடம், தங்க புதையல் இருப்பதாக கூறி இரண்டு பேர் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இந்த செய்தியை பார்த்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் இதேபோன்று இரண்டு லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார்.
இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து வாகராயம்பாளையம் வந்த வெங்கடாஜலபதி, சதாசிவத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தங்க புதையல் மோசடி கும்பல், இருவரிடமும் ஒர மாதிரியாக அணுகி தங்கத்தை காட்டி பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பணத்தை மீட்டு தரும்படி இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.