"இதனாலதான் வீட்டுக்கு வர வச்சி கொன்றோம்"... கணவன், கர்ப்பிணி மனைவி பரபரப்பு வாக்குமூலம் - பொள்ளாச்சி மாணவி கொலையில் ட்விஸ்ட்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சுஜய். இவரது வீட்டில் கடந்த 2 ஆம் தேதி சுப்புலெட்சுமி என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவான சுஜய் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி ரேஷ்மாவை கேரளாவில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுஜய் நடத்தி வந்த நிறுவனத்தில் ரேஷ்மாவும், சுப்புலட்சியும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதில், ரேஷ்மாவுக்கும், சுஜய்க்கும் முதலில் காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனர். அந்த இடைவெளியில் சுஜய்க்கும், சுப்புலட்சுமிக்குமிடையே காதல் ஏற்பட்ட நிலையில், மீண்டும் தன்னிடம் திரும்பி வந்த ரேஷ்மாவை சுஜய் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் சுப்புலட்சுமிக்கு தெரியவரவே சுஜய்க்கும், சுப்புலட்சுமிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தான், சம்பவத்தன்று சுப்புலட்சுமியை வீட்டுக்கு வரவழைத்து, கர்ப்பிணியான ரேஷ்மாவும், சுஜய்யும் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.