"என்னங்க இது அநியாயமா இருக்கு" - பழனி கோயிலில் கொதித்த பக்தர்

x

பழனி முருகன் கோயிலில், மொட்டை அடிக்க 200 ரூபாய் வலுக்கட்டாயமாக கேட்கப்படுவதாக பக்தர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த பழனிகுமார் என்ற பக்தர், பழனி முருகன் கோயிலில் முடி காணிக்கை செலுத்துவதற்காக சரவணப் பொய்கை மொட்டை அடிக்கும் இடத்தில் மொட்டை அடித்துள்ளார். அப்போது, மொட்டை அடிக்கும் ஊழியர் வலுக்கட்டாயமாக 200 ரூபாய் கேட்டுள்ளார். இதே போன்று, முடியை அகற்றும் ஊழியரும் 20 ரூபாய் கெட்டுள்ளார். முடி காணிக்கைக்கு இலவசம் என அறிவித்திருக்கும் போது, வலுக்கட்டாயமாக பணம் கேட்பதாக, கோயில் நிர்வாகத்திடம் பழனிகுமார் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பணம் பெற்ற ஊழியர்களிடம் இருந்து, பணத்தை திரும்ப‌ப் பெற்று அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனை பழனிகுமார் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்