"இதுதான் கடைசி" - மூத்த மகனுக்காக விஜயகாந்த் போட்ட ட்வீட்
தனது மூத்த மகன் விஜயபிரபாகரன் மும்பையில் வரும் 25ஆம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக விஜயகாந்த் மகிழ்ந்துள்ளார். இதில் உலகப்புகழ்பெற்ற ஹிப்ஹாப் ராப் பாடகர் "50 சென்ட்" (50 CENT) இந்தியா வருகை தர உள்ளதாகவும், மேலும் இதுதான் அவரது கடைசி இசை நிகழ்ச்சி பயணம் எனவும் விஜயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். வருங்காலத்தில், பல உலகப்புகழ்பெற்ற இசை கலைஞர்களை இந்தியாவிற்கு வரவழைத்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
Next Story