ப்ளஸ்-2 வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவருக்கு இந்த நிலையா? - கோபத்தில் கலெக்டர் எடுத்த ஆக்சன்

x

சிவகங்கையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனைப் படைத்த மாணவனுக்கு, மாவட்ட ஆட்சியர் நேரில் ஜாதிச் சான்றிதழ் வழங்கினார்... பழமலை நகரைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்ற மாணவர், நடந்து முடிந்த ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்கள் பெற்று, நரிக்குறவர் குடியிருப்பில் முதன்முதலாக தேர்ச்சி பெற்றார். இதனைத் தொடர்ந்து மேற்படிப்பில் சேர்வதற்காக, சமீபத்திய அரசாணையின்படி தனது ஜாதிச் சான்றிதழியில், எம்.பி.சி. பிரிவுக்கு பதிலாக பழங்குயினர் பிரிவில் மாற்றித் தருமாறு வருவாய் துறைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், ஜாதிச் சான்றிதழை வழங்காமல் மாணவன் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தார். அந்த வகையில் மாணவன் தங்கப்பாண்டியை நேரில் அழைத்த மாவட்ட ஆட்சியர், ஜாதிச் சான்றிதழை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்