இது கல்யாண சாவு...! வெடி... ஆடல்,பாடல்... கரகாட்டம் - காளைக்கு இறுதி மரியாதை

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கானூர் கிராமத்தில், காளை மாட்டுக்கு சிலை வடித்து சமய கருப்பண சுவாமி என்ற பெயரில் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர்.

இங்கு பெரியவர், சின்னவர் என்ற இரண்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த காளைகளையும் இந்த கோவிலும் வணங்கி சென்று நேத்திக்கடன் செலுத்தினால், தீர்க்க முடியாத நீதிமன்ற வழக்குகளுக்கு சீக்கிரம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பும் கிராம மக்கள், குல தெய்வமாகவும், நீதியரசராகவும் பார்த்து வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், பெரியவர் என்ற காளை வயது மூப்பால் உயிரிழந்த‌து.

வீட்டில் ஒரு பிள்ளை போல் வளர்த்து வந்த‌தால் சுற்று வட்டாரத்தை சேர்த்த மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வெடி வெடித்து, பம்பை முழங்க, கரகாட்டம் மேலதாளம் ஆட்டம் பாட்டத்துடன் சகல மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தனர்.

ஊரே சேர்ந்து காளைக்கு இறுதி மரியாதை செலுத்தி வழிபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்