"இதுக்கும் என்னோட கணவருக்கும் சம்பந்தமில்லை.." - ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்தோடு கதறும் மனைவி

x

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் துர்கா தேவி. இவரது கணவர் கலைஞர் என்ற நாகராஜ், திமுக மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பொம்மையார்பாளையத்தில் விமல்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மூன்றாவது குற்றவாளியாக நாகராஜ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தமது கணவருக்கு சம்பந்தமில்லை எனக் கூறி, துர்கா தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்