எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை - இறந்தவர் உடலை வைத்து மக்கள் சாலை மறியல்
- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே இறந்தவர் உடலை வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பூவனூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வன் என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் கொலை செய்யப்பட்டிருப்பதால் நீடாமங்கலம், பூவனூர் ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
- . இதனிடையே, நீடாமங்கலம் பகுதியில் நடந்த வன்முறையில், சாலையோரம் இருந்த கடைகள் சேதப்படுத்தப்பட்டன.
- மேலும் ராஜ்குமாரின் உடலை சாலை நடுவே வைத்து கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்
- . இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
Next Story