வயலில் இறங்கி ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
திருவாரூர் மாவட்டம், வடகண்டம் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டியலூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயிகளிடம் அமைச்சர் சக்கரபாணி குறைகளை கேட்டறிந்தார். அமைச்சர் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வயலில் இறங்கி, மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை எடுத்துச் சென்று அமைச்சரிடம் காண்பித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தியாகராஜன் மற்றும் மாவட்ட வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்யிர்களை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த மாவட்டத்தில் 4 நாட்களில் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.
இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், முத்துப்பேட்டை கோவிலூர், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்களில் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து, பின்னத்தூரில் நெல் உலர்த்தும் பணிகளையும், சங்கேந்தி நெல் கொள்முதல் நிலையத்திலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்ட அமைச்சர் சக்கரபாணி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.