ரூ.10 லட்சம் கேட்டு கல்லூரி மாணவன் கடத்தல்... செல்போனில் மிரட்டல்... அடிபணியாத தந்தை
- திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், கல்லூரி மாணவனை கடத்தி, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வலங்கைமான் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜயராகவன் என்பவரின் மகன் பெரியண்ணா, சக கல்லூரி மாணவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளார்.
- இதனிடையே, சாக்கோட்டை கிராமத்தில் வைத்து பெரியண்ணாவை, பணத்திற்காக கடத்த கும்பல் ஒன்று திட்டம் தீட்டியுள்ளது.
- அதன்படி, நெடுமாறன், விக்னேஷ்வரன், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல், பெரியண்ணாவை கடத்தி, அவரது தந்தை விஜயராகவனுக்கு 10 லட்சம் ரூபாய் கேட்டு செல்போனில் மிரட்டியுள்ளனர்.
- இதற்கு விஜயராகவன் அடிபணியாததை அடுத்து, அந்தக் கும்பல் பெரியண்ணாவை, நாச்சியார்புரம் அருகே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
- இதுதொடர்பான புகாரின் பேரில், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story