ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில்.. கெட்டு போன மில்க் ஷேக் கொடுக்கப்பட்டதா..? | Thiruvarur

x
  • திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில் வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டுப் போய் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திருவாரூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
  • மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர், அரசு அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
  • முன்னதாக நலத்திட்ட உதவிகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற கட்டுரை கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
  • உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
  • இந்நிலையில் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டு போய் இருந்ததாகவும், அது துர்நாற்றத்துடன் பொங்கி வந்ததால் யாரும் குடிக்கவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்தனர்.
  • இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்